தொடர்ச்சியான 4வது தடவையாக இளையோர் உலகக்கிண்ணத்தின் இறுதிப்போட்டியில் இந்தியா …!
மேற்கிந்திய தீவுகளில் இடம்பெற்றுவரும் இளையோர் உலகக்கிண்ண இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது .
ஏற்கனவே நான்கு தடவைகளில் உலகக்கிண்ணத்தை தன்னகத்தே கொண்டிருக்கும் இந்திய இளைஞர் அணி இம்முறை தொடர்ச்சியான 4வது தடவையாக இறுதி ஆட்டத்திற்கு தேர்வாகி உள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது .
நேற்று இடம்பெற்ற அவுஸ்திரேலிய அணியுடனான போட்டியில் 96 ஓட்டங்களால் வெற்றி பெற்றதன் மூலமாக டுஷ் தல் தலைமையிலான இந்திய அணி இறுதிப் போட்டியை எட்டியது.
நேற்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 290 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது ,முதல் 25 ஓவர்களும் மந்தமாக துடுப்பெடுத்தாடிய இந்திய அணி ,மீதமான 25 ஓவர்களிலும் 204 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது அதிலும் இறுதி 10 ஓவர்களில் 108 ஓட்டங்கள் பெறப்பட்டு இருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது .
37 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும் அணித்தலைவர் டுஷ் தல் அடித்த சதம் அதேபோன்று உதவித்தலைவர் ரசீக் அவருடைய அரைச்சதம், இருவரும் 3 வது விக்கட்டில் பகிர்ந்த 204 ஓட்டங்கள் இணைப்பாட்டம் இந்தியாவை கரை சேர்த்தது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணியின் ஓட்ட வேகம் அதிகமாக காணப்பட்டாலும், அவர்கள் 41.5 வது ஓவரிலேயே 194 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் பறிகொடுத்து போட்டியில் தோல்வியை தழுவினர்.
இந்த வெற்றி மூலம் இந்திய அணி நான்காவது தொடர்ச்சியான தடவையாக இறுதிப் போட்டியை எட்டியது, 2016ஆம் ஆண்டு இஷன் கிஷன் தலைமையிலான இந்திய அணி ,மேற்கிந்திய தீவுகள் அணியிடம் தோல்வியை தழுவியது .2018 பிரித்வி ஷா தலைமையிலான இந்திய அணி உலக கிண்ணத்தை கைப்பற்றியது .
இறுதியாக இடம்பெற்ற 2020 ல் இடம்பெற்ற போட்டியில் இந்திய அணி ,வங்கதேசத்திடம் தோல்வியைத் தழுவியது.
இப்போது டுஷ் தல் தலைமையிலான இந்திய அணி தொடர்ந்து நான்காவது தடவையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்து இருக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது .
இளையோர் உலகக்கிண்ண வரலாற்றில் அதிக கிண்ணங்கள் நான்கு கிண்ணங்களை இந்தியா தன்னகத்தே கொண்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது, வருகின்ற 5ஆம் திகதி மாலை 6.30 க்கு இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகள் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்த உள்ளன.