தொடர் தோல்விகளில் இருந்து மீண்டார் பாபர் அசாம், ஆறுதல் வெற்றி கிட்டியது பாகிஸ்தான் ..!

தொடர் தோல்விகளில் இருந்து மீண்டார் பாபர் அசாம், ஆறுதல் வெற்றி கிட்டியது பாகிஸ்தான் ..!

பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளில் இன்று இடம்பெற்ற போட்டியில் ஆறுதல் வெற்றியை பெற்றுள்ளது கராச்சி கிங்ஸ் அணி.

ஏற்கனவே Play Off செல்வதற்கான வாய்ப்பை முற்றுமுழுதாக கராச்சி அணி இழந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணியின் தலைவராக இருக்கும் பாபர் அசாம் தலைமை வகிக்கும் கராச்சி கிங்ஸ் அணி தொடர்ச்சியான 8 போட்டிகளிலும் மோசமாக விளையாடி தோல்வியை தழுவியது.

இந்த நிலையில் லாஹூர் குவலேண்டர்ஸ் அணியுடனான இன்றைய போட்டியில் 22 ஓட்டங்கள் வித்தியாசத்தில் போராடி வெற்றி பெற்றது.

ஆக மொத்தத்தில் PSL தொடரின் ஒன்பதாவது போட்டியிலேயே கராச்சி கிங்ஸ் அணி இந்த ஆண்டில் முதல் வெற்றியை ஈட்டி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கராச்சி அணி முதலில் ஆடி 149 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அணி லாஹூர் அணி 127 ஓட்டங்கள் மட்டுமே பெற்று 22 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.