தோனிக்கு அடுத்து சென்னை அணியை வழிநடத்த போகும் கேப்டன் யார் என்ற கேள்வி அதிக அளவில் சென்னை ரசிகர்களின் கேள்வியாக எழுந்து வருகிறது.
இந்த ஆண்டு சிஎஸ்கே அணி கோப்பையை ஜெயித்தால் நிச்சயம் தோனி அணியிலிருந்து வெளியேறுவார் என்று கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு மெகா ஏலம் இடம்பெறவுள்ளது, அப்போது தோனிக்கு 40 வயது, தோனியே சென்னை அணியின் தலைவராக தொடர்வார் எனவும் CEO காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
இதுவரை 200 போட்டிகளில் சிஎஸ்கே அணிக்காக தலைமை தாங்கியுள்ள தோனி 110 வெற்றிகளை பெற்றுள்ளார். அவரது தலைமையில் சென்னை அணி மூன்று முறை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் அடுத்ததாக சிஎஸ்கே அணியின் கேப்டனாக யாரை தேர்வு செய்ய விரும்புகிறீர்கள் ? என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் பக்கத்தில் ஒரு கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த சிஎஸ்கே அணியின் முன்னணி ஆல் ரவுண்டர் ஜடேஜா , ‘8’ என்ற நம்பரை மட்டும் பதிலாக குறிப்பிட்டு இருந்தார்.
சென்னை அணியில் 8ம் நம்பரை பயன்படுத்துவது ஜடேஜா மட்டும் தான். அவருடைய ஜெர்சி நம்பர் தான் 8 இதன் மூலம் அவர் தான் சிஎஸ்கே அணிக்கு அடுத்த கேப்டனாக விரும்புவதாக மறைமுகமாக சுட்டிக்காட்டியிருக்கிறார்.
?⚔️?#WhistlePodu | @imjadeja ? pic.twitter.com/Mnx93U9qCa
— CSK Fans Army™ ? (@CSKFansArmy) September 14, 2021
அவரது இந்த ரிப்ளை இணையத்தில் வைரலாக சிறிது நேரத்தில் ஜடேஜா அதனை அழித்துவிட்டார். ஆனாலும் இதனை கவனித்த ரசிகர்கள் அதனை ஸ்க்ரீன் ஷாட் எடுத்தும் அந்த பதிவினை பகிர்ந்தும் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
ஏற்கனவே சென்னை அணியின் அடுத்த கேப்டன் யார் என அனைவரும் எதிர்பார்த்துக் பார்த்துக்கொண்டிருக்கும் வேளையில் ஜடேஜா தானாக முன்வந்து தனது பெயரை சொல்லியுள்ளதும் ஒரே காமெடிதான்.
ஜடேஜா பெரிய அளவில் தேசிய அணிக்கோ அல்லது கழகமட்ட அணிகளுக்கு தலைவராக செயல்படவில்லை ஆயினும், 2008ஆம் ஆண்டு யூனியர் உலகக்கோப்பை வென்ற இந்திய அணிக்கு விராட் கோலிக்கு உதவித் தலைவராக ஜடேஜாவை செயற்பட்டிருந்தார் என்பதும் நினைவுபடுத்ததக்கதே.