தோனிக்கு புகழாரம் கொடுத்த செவாக்!

சென்னை அணியின் முன்னாள் கெப்டன் எம்.எஸ் தோனி பந்துவீச்சாளர்களை அணுகும் விதம் தனித்துவமானது என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேவாக் புகழாரம் சூட்டியுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கெப்டன் பதவியில் இருந்து எம்.எஸ்.டோனி விலகியதைத் தொடர்ந்து, சென்னை அணி கெப்டனாக ரவீந்திர ஜடேஜா செயற்பட்டு வருகிறார்.
இந்நிலையில், எம்.எஸ்.டோனி குறித்து முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் அளித்த பேட்டி வருமாறு:
“ஒரு பந்துவீச்சாளர் ஆரம்ப ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்தினால், அடுத்தடுத்து ஓவர்களை வழங்கி அப்போதே அந்த பந்துவீச்சாளர்  முழுமையாக தோனி பயன்படுத்திவிடுவார்.
ஆனால், மற்ற கெப்டன்கள் இவ்வாறு செய்ய மாட்டார்கள்.
தோனியின் இந்த அணுகுமுறைதான் அவரை சிறப்படையச் செய்துள்ளது என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேவாக் தெரிவித்துள்ளார்.