தோனியின் அறை 24 மணி நேரமும் திறந்திருக்கும், கோலியை பிடிக்க முடியாது..!

“தோனியின் அறை 24 மணி நேரமும் சக வீரர்களுக்காக திறந்திருக்கும். வீரர்கள் அவர் அறையில் என்ன வேண்டுமானால் செய்யலாம், கிரிக்கெட் பற்றியும் பேசலாம். உணவு அருந்தலாம்.

ஆனால் மைதானத்துக்கு வெளியே கோலியைப் பிடிக்க முடியாது. தொடர்பில் இருக்க மாட்டார். ரோகித் சர்மாவிடம் தோனியின் சாயல்கள் வேறு வகையில் உள்ளன என கருத்துக்கள் எழ ஆரம்பித்துள்ளன.

அதைவிடவும் அணித்தேர்விலும் கோலி விடாப்பிடியாக இருக்கிறார் எனவும் அவர்மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதுவே அவரது தலைமைத்துவ விலகலுக்கும் காரணமாகிப்போகிறது.

அதாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் வேண்டுமென்றே 2 ஸ்பின்னர்களை வைத்தது , 2019 உலகக்கோப்பையில் 4ம் நிலையில் அணியில் யாரையும் செட்டில் ஆகவிடாமல் செய்தது வரை அவரது அட்ஜஸ்ட் செய்யும் போக்கற்ற இறுகிய மன நிலை கிசுகிசுக்கப்பட்டு வந்ததே.

சமீபத்தில் வேண்டுமென்றே உலகின் நம்பர் 1 ஸ்பின்னர் அஸ்வினை இங்கிலாந்தில் ட்ராப் செய்தது என்று கோலிக்கு எதிராக நிறைய விஷயங்கள் கிளம்பியுள்ளன.

ஆனால் கோலியை விடவும் ரோகித் தோனியின் சாயலை பின்பற்றுபவர், ஜூனியர் வீரர்களை உணவுக்காக வெளியே அழைத்துச் செல்வார் ரோகித் சர்மா. அவர்கள் சரியாக ஆடாத போது தட்டிக்கொடுத்து அவர்களின் மனநிலையை புரிந்து கொண்டு ஊக்குவிப்பார்.

ஜூனியர் பிளேயர்களைப் பொறுத்தவரை கோலி மிகவும் பலவீனமாகக் கையாண்டுள்ளார். அதாவது அவர்கள் சரியாக ஆடாத போது உதவமாட்டார், அணியை விட்டுத் தூக்கி விடுவார்.

முன்னாள் வீரர் ஒருவர் கோலியின் பிரச்னை பற்றி கூறும்போது, “தோனியின் அறை 24 மணி நேரமும் சக வீரர்களுக்காக திறந்திருக்கும். வீரர்கள் அவர் அறையில் என்ன வேண்டுமானால் செய்யலாம், கிரிக்கெட் பற்றியும் பேசலாம். உணவு அருந்தலாம். ஆனால் மைதானத்துக்கு வெளியே கோலியைப் பிடிக்க முடியாது. தொடர்பில் இருக்க மாட்டார். ரோகித் சர்மாவிடம் தோனியின் சாயல்கள் வேறு வகையில் உள்ளன என பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

இப்படியான சிக்கல்களால் கோலி தலமை பதவியில் தடுமாறுகிறார் எனவும் அந்த செய்தி குறிப்பில் தைரிவிக்கப்பட்டுள்ளது.