தோனியின் நியமனம் ஏன் -தெளிவான விளக்கத்தைக் கொடுத்த பிசிசிஐ பொருளாளர் ..!

தோனியின் நியமனம் ஏன் -தெளிவான விளக்கத்தைக் கொடுத்த பிசிசிஐ பொருளாளர் ..!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், வெற்றிகரமான அதிஷ்டக்கார தலைவராகவும் கருதப்படும் மஹேந்திர சிங் தோனி மீண்டும் இந்திய கிரிக்கெட் அணிக்கு திரும்பியிருக்கிறார்.

இம்முறை வீரராக இல்லாமல் வீரர்களை உற்சாகப்படுத்தும், வழிகாட்டும் ஒரு ஆலோசகர் பதவி தோனிக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் தோனி திடீரென ஏன் நியமிக்கப்பட்டார் என்று சொல்லி ரசிகர்கள் எல்லோரும் கேள்வி எழுப்புகின்றனர், இந்திய கிரிக்கெட் சபையின் பொருளாளர் அருண் துமால் தெளிவான விளக்கத்தை வெளியிட்டிருக்கிறார்.

இதன் அடிப்படையில் இந்திய கிரிக்கெட் அணியில் தோனி நியமிக்கப்பட்டமை எவரையும் குறை மதிப்பீட்டுக்கு உட்படுத்தும் விடயம் அல்ல எனவும் மாறாக இந்திய அணியின் வெற்றிகளுக்கு ஆலோசனை வழங்குவதற்காகவே நியமிக்கப்பட்டார் என இந்திய கிரிக்கெட் சபையின் பொருளாளர் தெளிவுபடுத்தியிருக்கிறார்.