தோனியின் IPL தலைமைத்துவ விலகல்- புதிய தலைவரான ஜடேஜா முதல்முறையாக மனம் திறந்தார்..!

தோனியின் IPL தலைமைத்துவ விலகல்- புதிய தலைவரான ஜடேஜா முதல்முறையாக மனம் திறந்தார்..!

உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி, வரும் இந்தியன் பிரீமியர் லீக்கிற்கான சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக இன்று திடீரென அறிவித்தார்.

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் நம்பர் ஒன் ஆல்ரவுண்டரான ஜடேஜா, 2012 முதல் CSKயின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்துள்ளார். தோனி மற்றும் முன்னாள் இந்திய பேட்டர் சுரேஷ் ரெய்னாவுக்குப் பிறகு ஜடேஜா சிஎஸ்கேயின் மூன்றாவது கேப்டனாக இருப்பார்.

இது தொடர்பில் புதிய அணித்தலைவர் ஜடேஜா தனது கருத்தை முதல் முறையாக தெரிவித்துள்ளார். “நான் அதிகம் கவலைப்படத் தேவையில்லை, அவர் இங்கே இருக்கிறார்.

நான் கேட்க வேண்டிய கேள்வி எதுவாக இருந்தாலும், நான் அவரிடம் சென்று கேட்பேன்” என்றும் தோனி என்னை பக்கபலமாக வழிநடத்துவார் என்பதால் பயமின்றி இருக்கிறேன் என ஜடேஜா தெரிவித்தார்.

ஆயினும் என்மீது நம்பிக்கை வைத்து இந்த பதவியை ஒப்படைத்த அணி நிர்வாகத்திற்கும், ரசிகர்களுக்கும் என் நன்றிகள் எனவும் ஜடேஜா தெரிவித்தார்.