தோனியும் IPL தலைமைத்துவ சாதனையும்_ விபரம் இணைப்பு…!
தோனி IPL ல் அதிக போட்டிகளுக்குத் தலைமை தாங்கியவர் மட்டுமல்ல அதிக வெற்றிகளும் பெற்றுக்கொண்டவர்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஐபிஎல் போட்டிகளுக்கான தலைவராகும் ஆடி வரும் தோனி நேற்று இடம்பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணிக்காக 200வது ஐபிஎல் போட்டியில் தலைமைத்துவம் ஏற்றார்.
CSK அணிக்காக 200 போட்டிகளில் தலைவராக கடமையாற்றிய முதல் வீரர் என்ற பெருமையும் தோனி வசமானது.
இதுவரைக்கும் 200 போட்டிகளில் தலைமை தாங்கி 119 வெற்றிகளையும், 80 தோல்விகளையும் சென்னை அணிக்கு பெற்றுக் கொடுத்துள்ளார்.
நேற்று ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியுடனான போட்டியில் சென்னை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
தோனி தலைமையில் சென்னைக்கு கிடைத்து 80வது தோல்வியாக இந்த தோல்வி அமையப்பெற்றது, தோனி இந்திய கிரிக்கெட்டுக்கு மட்டுமல்ல சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும ஓர் அசைக்க முடியா தலைவராக மகுடம் சூடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தோனி தலைமையில் இதுவரைக்கும் 3 IPL கிண்ணங்களை வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இப்போது மீண்டும் ஒரு தடவை Play off க்கு தேர்வாகி உள்ளது.