தோனி இரசிகர்கள் கவலையில் கோலி ரசிகர்கள் கொண்டாட்டத்தில்- ஏன் தெரியுமா ?

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் மாபெரும் இறுதிப் போட்டி இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் சௌத்தம்டன் மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.

இந்த போட்டியை பொறுத்தவரையில் விராட் கோலி இன்றைய நாளில் முக்கிய சாதனைகளுக்கு சொந்தக்காரராக மாறியுள்ளார்.

இந்தியா சார்பில் அதிக டெஸ்ட் போட்டிகளுக்கு தலைவராக இருந்தவர் எனும் பெருமையை முன்னாள் தலைவர் மகேந்திரசிங் தோனி இடம் இருக்கிறது.

அதிக டெஸ்ட் போட்டிகளுக்கு தலைவராக இருந்தார்.

அந்த சாதனையை முறியடித்து இந்தியா சார்பில் அதிக டெஸ்ட் போட்டிகளுக்கு தலைவராக இருந்தவர் எனும் பெருமையை விராட் கோலி பெற்றிருக்கிறார்.

இன்று நியூசிலாந்துடனான போட்டியில் தலைமை தாங்குவதன் மூலமாக கோலி 61 வது போட்டியில் தலைவராக கடமையாற்றிய கொண்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்த நிலையில் கங்குலி அதேபோன்று சுனில் கவாஸ்கர் மோகமத் அசாருதீன் ஆகியோர் காணப்படுகிறார்கள் என்பதும் கவனிக்கத்தக்கது .

இது மாத்திரமல்லாமல் தோனி இல்லாத நிலையில் இந்திய அணி ஐசிசி இறுதிப்போட்டியில் விளையாடுகின்ற ஒரு சந்தர்ப்பமாகவும ் இந்த சந்தர்ப்பம் பார்க்கப்படுகிறது .

கடந்த 14 ஆண்டுகளில் தோனி இல்லாமல் ஐசிசியின் இறுதிப் போட்டி ஒன்றில் இந்திய அணி விளையாடும் முதல் சந்தர்ப்பமாகும் இந்த சந்தர்ப்பம் காணப்படுகின்றது.

இந்த நிலையில் தோனி ரசிகர்கள் கொஞ்சம் கவலைப்படுகிறார்கள். தோனியை ஐசிசி பைனல் ஒன்றில் இந்தியா சார்பில் காண முடியவில்லையே என்பதுதான் அவர்களின் கவலையாக இருக்கிறது.

ஆனால் கோலி ரசிகர்களை பொறுத்தவரை அவர்கள் கொண்டாடுகிறார்கள். ஏனெனில் கோலிக்கு இதுவரைக்கும் குறையாக இருக்கிற ஐசிசி கிண்ணம் ஒன்றையும் வெல்லவில்லை என்கிற குற்றச்சாட்டை துடைத்தெறிந்து, கோலி இந்த கிண்ணத்தை கைப்பற்றுவார் என்று ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.