சென்னை அணிக்கெதிரான போட்டியில் மும்பை அணியின் இளம் வீரர் இஷான் கிஷானின் புகைப்படம் இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒத்தி வைக்கப்பட்ட ஐபில் தொடர் நேற்று கோலகலமாக ஆரம்பமானது.
நேற்று ஆரம்பித்த போட்டியில் மும்பை மற்றும் சென்னை அணிகள் மோதின. டாஸ் வென்று பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் சென்னை ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தோனி வெறும் 3 ஓட்டங்களில் ஆடம் மில்ன் பந்து வீச்சில் போல்ட்டிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆகினார்.
தோனி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, அருகில் பீல்டிங் நின்று கொண்டிருந்த மும்பை இந்தியன்ஸ் வீரர் இஷான் கிஷன் அவுட் என்பது போல் நக்கல் செய்தார்.
அந்த புகைப்படத்தை மும்பை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.