தோனி முதுகில் குத்திய சிவம் துபே.. உடைந்து போன சிஎஸ்கே ரசிகர்கள்.. ஏற்கவே முடியாத ஆட்டம்

தோனி முதுகில் குத்திய சிவம் துபே.. உடைந்து போன சிஎஸ்கே ரசிகர்கள்.. ஏற்கவே முடியாத ஆட்டம்

தோனியின் கடைசி ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் போகக் காரணமே சிவம் துபே தான் என ரசிகர்கள் கடுமையான விமர்சனத்தை முன் வைத்து இருக்கின்றனர்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. இன்னும் 10 ரன்கள் கூடுதலாக எடுத்து தோல்வி அடைந்து இருந்தால் கூட அதிக நெட் றன ரேட் பெற்று சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி இருக்கும்.

ஆனால் சிஎஸ்கே அணியின் படுமோசமான பேட்டிங் காரணமாக அந்த வாய்ப்பை இழந்தது. சிஎஸ்கே அணியின் பேட்டிங் வரிசையில் மிகவும் மோசமாக ஆடியது சிவம் துபே தான். இந்தப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்ணயித்த 219 ரன்கள் என்ற இலக்கை நோக்கி சிஎஸ்கே அணி சேஸிங் செய்த போது, ஐந்தாம் வரிசையில் களமிறங்கினார் சிவம் துபே.

சிஎஸ்கே அணி 85 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்த நிலையில் களம் இறங்கிய அவர், அதிரடி ஆட்டம் ஆடி பெங்களூரு அணியை நிலைகுலைய வைப்பார் என எதிர்பார்த்து அனைவரும் காத்திருந்தனர். ஆனால், எந்த பந்தையும் அடிக்க முடியாமல் திணறினார் சிவம் துபே. நிறைய பந்துகளை வீணடித்த அவர் 15 பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார்.

இந்த போட்டியில் 10 ரன்கள் வித்தியாசத்தில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை சிஎஸ்கே அணி இழந்த நிலையில், சிவம் துபே தான் வீணடித்த பந்துகளில் ஒன்று, இரண்டு ரன்களாக ஓடி இருந்தால் கூட அது சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய அளவில் உதவி செய்திருக்கும். தோனியின் கடைசி ஐபிஎல் தொடர் என கூறப்படும் நிலையில் அவரால் மறுவாழ்வு பெற்ற சிவம் துபே அவரது முதுகிலேயே குத்தி விட்டதாக சிஎஸ்கே ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.