தோல்விக்கான காரணம் நானே -பொறுப்பை ஏற்றுக் கொள்கிறேன், சதாப் கான் கவலை…!

தோல்விக்கான காரணம் நானே -பொறுப்பை ஏற்றுக் கொள்கிறேன், சதாப் கான் கவலை…!

ஆசியக் கிண்ணப் போட்டித் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று நிறைவுக்கு வந்திருக்கிறது, பாகிஸ்தான் அணியை 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி கொண்ட இலங்கை ஆறாவது தடவையாக சாம்பியன் மகுடம் சூடியது.

58 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுக்களை இழந்து நெருக்கடியில் இலங்கை அணி் இருந்தாலும், பாகிஸ்தான் வீரர்களால் தவறவிடப்பட்ட இலகுவான பிடியெடுப்பு வாய்ப்புகளே அவர்களது தோல்விக்கு காரணமாக அமைந்தது,

அதுவும் அதிரடியாக ஓட்டங்களைக் குவித்த பானுக ராஜபக்சவின் பிடியை பிடியை எடுக்க முடியாது போனமையே தோல்விக்கான காரணம், அதற்கான முழுப்பொறுப்பையும் தான் ஏற்றுக் கொள்வதாக பாகிஸ்தான் அணியின் உதவித்தலைவர் சதாப் கான் தெரிவித்துள்ளார்.

இந்த தொடரில் பிரகாசித்த இளம் வீரர்களுக்கு தன்  வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்துள்ளார்.

YouTube தளத்துக்கு செல்வதற்கு ?