தோல்வியுடன் விடைபெற்றது சென்னை – போட்டிக்கு பின்னர் தோனி தெரிவித்த கருத்து…!

“நம்ம மலிங்கா உண்மையிலேயே சிறந்தவர், அடுத்த ஆண்டும் சிஎஸ்கே அணியில் நிச்சயம் இடம் பெறுவார்”.

மதிஷா பத்திரனா பற்றி மகேந்திர சிங் தோனி கூறுகிறார்!

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் 2022 பதிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை, ராஜஸ்தான் அணிகளது போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்தது. 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதுடன் play off வாய்ப்பையும் உறுதிசெய்தது.

சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிவரும் மதிச பத்திரன, இன்றும் சிறப்பாக பந்துவீசி 28 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுத்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி, 18 மற்றும் 20-வது ஓவர்களை வீசும் பொறுப்பை இளம் வீரர் மதிஷா பத்திரனாவிடம் இன்றும் ஒப்படைத்தார்.

போட்டியின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய மகேந்திர சிங் தோனி, அடுத்த ஆண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடிப்பார் என்றார். மேலும் கருத்து தெரிவித்த மகேந்திர சிங் தோனி, மதீஷா பத்திரனா குறித்து எம்.எஸ் தோனி, “எங்கள் மலிங்காவை (பத்திரனா) தேர்ந்தெடுப்பது கடினம், அடுத்த ஆண்டு அவர் எங்களுக்காக நிச்சயம் பங்களிப்பார்” என்பதை உறுதிப்படுத்தினார்.

சென்னை அணி மொத்தமாக ஐபிஎல்லில் விளையாடியுள்ள 13 வருடங்களில் இரண்டு தடவைகள் (2019 & 2021) மட்டுமே Play off தேரவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த இரண்டு வருடங்களிலும் சுரேஷ் ரெய்னா சென்னை அணியில் இடம்பிடித்து இருக்கவில்லை என்பதும் சுட்டிக்காட்டகூடிய ஒரு விஷயமாக இருக்கிறது.

எது எவ்வாறாயினும் இந்த ஆண்டுக்கான சென்னை அணியின் ஐபிஎல் பயணம் நிறைவுக்கு வருகிறது, அடுத்த ஆண்டு தோனி தலைமையில் புதிய உத்வேகத்துடன் சென்னை அணி களம் காணும் நம்பிக்கை ரசிகர்களுக்கு இருக்கிறது.

2023 இல் சந்திப்போம் ?

?CSK

You Tube Link ?

YouTube Link ?