நடப்பு உலக சாம்பியன்களை வைட்வோஷ் செய்தது இலங்கை இளையோர் அணி..!

நடப்பு உலக சாம்பியன்களை வைட்வோஷ் செய்தது இலங்கை இளையோர் அணி..!

இலங்கை கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்ட நடப்பு இளையோர் உலக சாம்பியனான பங்களதேஷ்  அணிக்கும் இலங்கை இளையோர் அணிக்கும் இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நிறைவுக்கு வந்துள்ளது.

இந்த தொடரின் இன்று ஐந்தாவது ஒரு நாள் போட்டியில் நான்கு ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றதன் மூலமாக தொடரை 5-0 என இலங்கை அணி வெற்றி கொண்டுள்ளது.

உலக இளையோர் உலகக்கிண்ணப் போட்டிகளில் நடப்பு சாம்பியனான பங்களாதேஷ் அணி, இலங்கையுடனான போட்டிகளில் 5 ஆட்டங்களிலும் தோல்வியை தழுவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அடுத்த ஆண்டு இளையோர் உலகக் கிண்ண போட்டிகள் இடம்பெறவுள்ள நிலையில், இலங்கையினுடைய இந்த ஆதிக்கமும்,வெற்றியும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.

 இரு அணிகளும் தொடரில் மிகப்பெரிய அளவில் முட்டி மோதி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 240 ஓட்டங்களை பெற்றது, அணி சார்பில் சமிந்து விக்ரமசிங்க தொடரின் முதலாவது சதத்தை பதிவு செய்தார்.

241 எனும் இலக்குடன் ஆடிய பங்களாதேஷ் வெற்றி பெற்று விடும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், இலங்கை அணியின் சிறப்பான பந்துவீச்சு காரணமாக 4 ஓட்டங்களால் இலங்கை அபார வெற்றியை தனதாக்கிக் கொண்டது.

போட்டியில் துடுப்பெடுத்தாடி கொண்டிருந்த பங்களாதேஷ் அணிக்கு ஒரு கட்டத்தில் 6 விக்கெட்டுகள் கையிருப்பில் இருக்க 3 ஓவர்களில் 18 பந்துகளில் 18 ஓட்டங்கள் மட்டுமே தேவையாக இருந்தது, இந்த நிலையில்தான் இலங்கை இந்த போட்டியில் வெற்றி பெற்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

அதுவும் இலங்கை அணி இறுதி 9 பந்துகளில் இலங்கை அணி 5 விக்கெட்டுக்களை பறித்திருந்தது, இதன் மூலமாகவே பங்களாதேசை இன்றைய போட்டியில் இலங்கை அணி வெற்றி கொண்டது.