நடப்பு சாம்பியன் வெளியேறியது -இறுதிப் போட்டியில் இலங்கை, பாகிஸ்தான்..!

ஆணியக்கிண்ணத்தின் பாகிஸ்தான் ,ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் இறுதிப் போட்டியை எட்டியுள்ளது.

சுப்பர் 4 சுற்றில், இலங்கை அணி தற்போது இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிராகப் போட்டியிட்டு இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை எட்டியுள்ளது.

​​ஒரு போட்டியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான், புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்தது. நேற்றிரவு பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதால், இன்னும் ஒரு போட்டி எஞ்சியிருக்கும் நிலையில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும் வாய்ப்பைப் உறுதிசெய்துள்ளன.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 129 ரன்கள் குவித்தது. பதில் இன்னிங்சை விளையாடிய பாகிஸ்தான் 15 ஓவர்கள் 3 பந்துகளில் 87/3 என வலுவான நிலையில் இருந்தது.

தோல்விக்கான அறிகுறிகள் தென்பட்டாலும், விட்டுக்கொடுக்காமல் ஆட்டத்தை கடைசி ஓவருக்கு கொண்டு வந்த ஆப்கானிஸ்தான், 19 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தானின் நிலையை 119/9 என மாற்றியது.

கடைசி ஓவரில் 11 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட் மட்டுமே மீதம் இருந்தது. ஆப்கானிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஃபரூக்கி வீசிய 20வது ஓவரின் முதல் பந்தில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா அடுத்தடுத்து இரண்டு சிக்சர்களை அடித்து பாகிஸ்தானுக்கு வெற்றியை தேடித் கொடுத்தார்.

9 விக்கெட்டுகள் வீழ்ந்த பின்னும் இறுதி ஓவரில் 11 ஓட்டங்கள் தேவை என்கின்ற ஒரு நெருக்கடியான நிலையிலும் போட்டியை முடித்து காட்டியிருக்கும் பாகிஸ்தான், தங்கள் அணியில் இருக்கும் 11 வீரர்களும் மேட்ச் வின்னர்கள் என்பதை பறைசாற்றுகிறது.

அந்த வெற்றியின் மூலம் சூப்பர் 4 சுற்றில் எதிர்கொண்ட இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்த ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா அணிகள் போட்டியிலிருந்து வெளியேறின.

இதன்படி, இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இதுவரை எதிர்கொண்ட இரண்டு போட்டிகளிலும் சூப்பர் 4 சுற்றில் வெற்றி பெற்றதன் காரணமாக ஆசிய கிண்ணத்தின் இறுதிப் போட்டிக்குள் நுழைய முடிந்தது.

இதன்படி, ஐந்து முறை ஆசியக் கிண்ணத்தை வென்றுள்ள இலங்கை அணி, எதிர்வரும் செப்டம்பர் 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தானுடன் இறுதிப் போட்டியில் களமிறங்கவுள்ளது.

YouTube காணொளிக்கு ?