இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக உருவாகிவரும் நடராஜன் ,தனது கணுக்கால் உபாதைக்கு வெற்றிகரமாக சத்திரசிகிச்சைகளை பூர்த்திசெய்துள்ளதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
டேவிட் வோர்னர் தலைமையிலான சன் ரைசேர்ஸ் ஹைதராபாத் அணிக்காக IPL போட்டியில் பங்கேற்றுவந்த நடராஜனுக்கு அண்மையில் கணுக்காலில் உபாதை ஏற்பட்டது.
இதன்காரணத்தால் நடராஜன் IPL ஆரம்ப போட்டிகளில் மட்டுமே பங்கேற்றிருந்தார், இந்தநிலையில் தனது கணுக்கால் உபாதைக்கு வெற்றிகரமாக சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நடராஜன் தனது புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
மீண்டும் ஜோக்கர் நடராஜனாக மீண்டு வாருங்கள் என்று ரசிகர்கள் பிரார்த்தனைகளை முன்வைத்துள்ளனர்.