இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான அடுத்த ஆண்டுக்கான ஒப்பந்த பட்டியலில் 4 குழுக்களில் 28 வீரர்கள் இணைக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் சபை நேற்று அறிவித்தது.
அதிலே அண்மைக்காலமாக பேசுபொருளாக காணப்படும் தமிழகத்தின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் இணைக்கப்படாமை எல்லோருக்கும் பெருத்த கவலையை தோற்றுவித்திருந்தது.
இந்த நிலையில் அதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.
3 டெஸ்ட் அல்லது 7 ஒருநாள் போட்டிகள் அல்லது 10 T20 போட்டிகளிலாவது குறைந்தபட்சம் ஒரு வீரர் விளையாடியிருந்தாலே ஒப்பந்தத்தில் கவனத்தில் கொள்ளப்படுவார்கள்.
குறித்த நிபந்தனைகளுக்குள் நடராஜன் இல்லாத நிலையிலேயே அவரால் ஒப்பந்த பட்டியலில் இணைய முடியாது போயுள்ளது.
புதுமுக வீரர்கள் சிராஜ், கில், போன்ற வீரர்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.