நடராஜன் டெத் ஓவர் ஸ்பெசலிஸட் -T20 உலகக் கோப்பையில் அவரை தவறவிட்டோம்: ரவி சாஸ்திரி

நடராஜன் டெத் ஓவர் ஸ்பெசலிஸட் -T20 உலகக் கோப்பையில் அவரை தவறவிட்டோம்: ரவி சாஸ்திரி

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்த டி20 உலகக் கோப்பை தோல்வியின் போது இந்திய அணி இடது கை வேகப்பந்து வீச்சாளரைத் தவறவிட்டதாக முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்தார்.

குறிப்டிபாக நடராஜனை டெத் பவுலிங் ஸ்பெஷலிஸ்ட் என்று அவர் பல ராட்டியுள்ளார்.

2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அவுஸ்ரேலிய வெற்றியின் இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் தொடரில் வெளிச்சத்திற்கு வந்தவர் நடராஜன்,

முழங்கால் காயத்தால் பாதிக்கப்பட்டு கடந்த ஆண்டின் பெரும்பகுதியைத் தவறவிட்டார்.

“அவர் தான் அந்த ஸ்பெஷலிஸ்ட் டெத் பந்துவீச்சாளர், அந்த யார்க்கர்களை மிகவும் திறமையாக வீசுகிறார். அவர் சிறந்த கட்டுப்பாட்டில் உள்ளார் என்று சாஸ்திரி கூறினார்.

SRH ஆல் ரூ. 4 கோடிக்கு இம்முறை ஏலத்தில் வாங்கப்பட்ட 31 வயதான அவர், 12 மாதங்களுக்குப் பிறகு, தனது பிறந்த நாளன்று விளையாடிய போட்டியில் நான்கு ஓவர்களில் 26 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை எடுத்தார்.