நட்சத்திரங்கள் இல்லாத வலுவிழந்த இங்கிலாந்து உலகக் கிண்ண அணி..!

நட்சத்திரங்கள் இல்லாதவலுவிழந்து இங்கிலாந்து உலகக் கிண்ண அணி..!

உலகக் கிண்ண இருபதுக்கு இருபது போட்டிகளில் இங்கிலாந்து அணி விபரம் ஒயின் மோர்கன் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகக்கிண்ண போட்டிகளில் மிக முக்கியமான வீரர்களாகக் கருதப்பட்ட பென் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் ஆகியோர் இந்த அணியில் இடம்பெறவில்லை.

அறிவிக்கப்பட்ட இங்கிலாந்து அணியில் சகலதுறை ஆட்டக்காரர் பென் ஸ்டோக்ஸ் அணியில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது, ஏற்கனவே அவருக்கு மனநல ஓய்வு தேவை என்று கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கி கொண்டிருக்கும் பென் ஸ்டோக்ஸ் உலகக்கிண்ண அணியிலும் இடம் பிடிக்க வில்லை, இது மாத்திரமல்லாமல் உபாதைகளால் அவதிப்பட்டு வரும் அவர்களுடைய மிக முக்கியமான நட்சத்திர பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் இல்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

2019ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஆர்ச்சர் ஆகியோர் மிகப்பெரும் அளவிலான பங்களிப்பை நல்கியவர்கள் என்பதும் நினைவு படுத்ததக்கது.

 

இது இரு வீரர்களும் இல்லாத நிலையில் இங்கிலாந்து ஒரு வலுவிழந்த அணியாகவே கிரிக்கெட் விமர்சகர்களால் நோக்கப்படுகிறது.

இதே நேரத்தில் The Hundred போட்டிகளில் காட்டிய அசாத்திய திறமையை அடிப்படையிலும், உள்ளூர் போட்டிகளில் காட்டுகிற திறமையின் அடிப்படையிலும் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ரைமல் மில்ஸ் அழைக்கப்பட்டமை சிறப்பம்சம், 2017 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நான்கு ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் அணியில் சேர்க்கப்பட்டமையும் ஆச்சரியம் தரும் ஒரு தேர்வாக அமைந்து இருக்கிறது.

இங்கிலாந்து T20 உலகக் கிண்ண அணி – இயன் மோர்கன் (தலைவர்), மொயின் அலி, ஜொன்னி பெயர்ஸ்டோ, சாம் பில்லிங்ஸ், ஜோஸ் பட்லர், சாம் கர்ரன், கிறிஸ் ஜோர்டன், லியாம் லிவிங்ஸ்டன், டேவிட் மலான், டைமல் மில்ஸ், ஆதில் ரஷீட், ஜேசன் ரோய், டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ், மார்க் வூட்