நன்றி மறவாத நடராஜன் -வாகனத்தை அன்பளிப்பு செய்தார் ❤

இந்திய கிரிக்கெட் அணி வீரரான நடராஜன் அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் அறிமுகமானதுடன் இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் இதயங்களை வென்றிருந்தார்.

இதனை கௌரவிக்கும் முகமாக பிரபல மஹிந்திரா வாகன நிறுவனம் அவருக்கு “மஹிந்திரா தார்” வாகனத்தை அன்பளிப்பாக வழங்கியது.
பெறுமதியான குறித்த வாகனத்தை தனனுடைய நலன்விரும்பியான ஜெய்பிரகாஷுக்கு அன்பளிப்பாக நடராஜன் வழங்கி, தனது நன்றி உணர்வை வெளிப்படுத்தியுள்ளார்.

பின்தங்கிய பகுதியில் இருந்த நடராஜனை, சர்வதேச கிரிக்கெட் வரை அழைத்துவர அயராது பாடுபட்டவர் ஜெயபிரகாஷ் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் கலக்கிய நடராஜன்,சிராஜ், கில், சைனி, சார்துல் தாகூர் போன்ற அறிமுக வீரர்களுக்கு மஹிந்திரா நிறுவனம் வாகனம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.