நமீபிய தேசிய கிரிக்கெட் அணிக்கு உலகக்கிண்ணம் விளையாடப் போகும் தென்னாபிரிக்க வீரர்..!

நமீபிய தேசிய கிரிக்கெட் அணிக்கு உலகக்கிண்ணம் விளையாடப் போகும் தென்னாபிரிக்க வீரர்..!

தென்னாப்பிரிக்காவின் 36 வயதான டேவிட் வீஸ் எனும் அதிரடி சகலதுறை ஆட்டக்காரர் நமீபிய தேசிய அணிக்காக எதிர்வரும் உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தென்னாபிரிக்க கிரிக்கட் அணிக்காக இறுதியாக 2017 ஆம் ஆண்டு டேவிட் வீஸ் விளையாடியுள்ளார்.

6 ஒருநாள் போட்டிகளிலும் 20 இருபதுக்கு இருபது போட்டிகளில் விளையாடியுள்ள வீஸ், விராட் கோலி தலைமையிலான பெங்களூர் அணியில் 15 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தகப்பனார் நமீபியர் என்கின்ற காரணத்தால் நமீபிய கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு தேர்வு செய்யப்பட்டதாகவும் நமீபிய கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இடம்பெற உள்ள 20- 20 உலக கிண்ண போட்டிகளில் இவர் நமீபிய குழாத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அடுத்து வரவுள்ள ஜிம்பாப்வேக்கு எதிரான தொடருக்கான நமீபியா அணி:

ஜெர்ஹார்ட் எராஸ்மஸ் (கேப்டன்), ஜேன் கிரீன், ஸ்டீபன் பார்ட், கிரேக் வில்லியம்ஸ், நிக்கோல் லோஃப்டி-ஈடன், மைக்கேல் டு ப்ரீஸ், ஜேஜே ஸ்மிட், ஜான் ஃப்ரைலிங்க், கார்ல் பிர்கென்ஸ்டாக், ரூபன் ட்ரம்பல்மேன், பிக்கி யா பிரான்ஸ், பெர்னார்ட் ஸ்கோல்ட்ஸ், மொரிஷியூங்க்யுல்யுங் நெல், மைக்கேல் வான் லிங்கன் மற்றும் ஷான் ஃபோச்.