நம்பர் 1 ஐசிசி நடுவர்- இப்போது கடை ஓனர்- திசைமாறிய பாக்.நடுவரின் வாழ்க்கை..!

நம்பர் 1 ஐசிசி நடுவர்- இப்போது கடை ஓனர்- திசைமாறிய பாக்.நடுவரின் வாழ்க்கை
.

பாகிஸ்தானின் ஆசாத் ரவுஃப் அவரது நடுவர் வாழ்க்கையின் உச்சத்தில் உலகின் சிறந்த நடுவராக கருதப்பட்டார். ஐசிசி எலைட் பேனலில் அவர் அங்கம் வகித்தது அவரது திறமைக்கு சான்றாகும்

. இருப்பினும், ஐபிஎல் 2013 இன் போது ஊழல் நடைமுறைகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு, பிசிசிஐயின் தடைக்குப் பிறகு, ரவூப்பின் வாழ்க்கை திசை மாறியது. அவரது சொந்த வார்த்தைகளில் கூற வேண்டுமென்றால் கிரிக்கெட்டுடனான தொடர்பை முற்றிலும் அவர் இழந்தார்.

ஷேன் வார்ன் ஆசாத் ரவுஃபை சிறந்த நடுவர் என்று பாராட்டியது குறிப்பிடத்தக்கது. ஆனால் 2012-ல் இவரது வாழ்க்கையில் பாலியல் குற்றச்சாட்டு சூறாவளி வீச மாடல் அழகி ஒருவர் இவர் மீது பாலியல் புகார் எழுப்பினார். அதிலிருந்து இவரது இமேஜ் பெரிய அடி வாங்கியது, இப்போடு லாகூர் லாந்தா பஜாரில் துணி மற்றும் ஷூக்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார் ஆசாத் ரவுஃப்.

ஆனால் இந்தக் கடையை தன் வாழ்வாதாரத்துக்காக நடத்தவில்லை என்று கூறும் ஆசாத் ரவுஃப், தன் கடை ஊழியர்களின் வாழ்வாதாரத்துக்காக நடத்துகிறேன் என்று கூறியுள்ளார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்து அவர் அளித்த பேட்டியில், “இது எனக்காக அல்ல, என்னுடைய ஊழியர்களின் தினப்படி சம்பளத்துக்காக நான் நடத்தும் கடை.

எனக்கு பேராசை கிடையாது, நிறைய பணம் பார்த்துவிட்டேன். உலகத்தை அதன் நடைமுறையுடன் பார்த்து விட்டேன். என்னுடைய ஒரு மகன் மாற்றுத்திறனாளி, இன்னொரு மகன் அமெரிக்காவில் படித்து திரும்பியுள்ளான். நான் தினமும் 5 முறை நமாஸ் செய்வேன். என் மனைவியும் 5 முறை நமாஸ் செய்வார்.

2013க்குப் பிறகே எனக்கும் கிரிக்கெட்டுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை, கிரிக்கெட்டை பார்ப்பது கூட இல்லை. ஏனெனில் ஒன்றை விட்டால் அதை முழுமையாக விடுவது என் கொள்கை.

2013 ஐபிஎல் ஊழலுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, நான் யாரிடமிருந்தும் எந்த பரிசுப் பொருளையும் வாங்கவில்லை. என்னை பிசிசிஐ 2016-ல் 5 ஆண்டுகள் தடை செய்தது. ஐபிஎல் தொடரில் நான் நல்ல நேரங்களை செலவிட்டேன், இந்தப் புகாரெல்லாம் பிற்பாடு வந்தது.

எனக்கும் பிசிசிஐ கூறிய குற்றச்சாட்டுக்கும் சம்பந்தமில்லை. அவர்கள்தான் குற்றம்சாட்டினார்கள், அவர்களே தடை விதித்தார்கள். பெண் ஒருவர் என் மீது புகார் எழுப்பிய பிறகும் நான் ஐபிஎல் தொடரில் நடுவர் பணியாற்றினேன்” என்றார் ஆசாத் ரவுஃப்.

#Abdh