நம்பிக்கையை விடாதீங்க! சிஎஸ்கே அணி வெற்றி பெறும் வழியை தோனி கண்டுபிடிப்பார்- வாட்சன்
ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமாக விளையாடி வருகிறது. இதுவரை விளையாடிய ஐந்து போட்டிகளில் நான்கு தோல்வி ஒரு வெற்றியை பெற்று தற்போது புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது. சிஎஸ்கே அணியில் பல பிரச்சனைகள் இருக்கிறது.
இதனை சரி செய்தால் மட்டுமே அந்த அணியால் வெற்றி பெற முடியும். இது குறித்து ஜியோ ஹாட் ஸ்டார் தளத்தில் சிஎஸ்கே வின் பார்ம் குறித்து வாட்சனிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், சிஎஸ்கே வின் செயல்பாடுகளில் நிச்சயம் எனக்கு ஆச்சரியம் தான் தருகிறது.
ஏனென்றால் ஒவ்வொரு ஏலத்தின் முடிவிலும் சிஎஸ்கே அணி பலமான வீரர்களை தேர்வு செய்து, தங்களுக்கு எந்த வீரர்கள் வேண்டும் என்பதை முடிவு செய்து பிளேயிங் லெவனை தயார் செய்வார்கள். பேட்டிங்காக இருந்தாலும் சரி, பந்துவீச்சாக இருந்தாலும் சரி ஆனால் தற்போது சிஎஸ்கே அணி தடுமாறுவதை பார்க்கும் போது இது சிஎஸ்கே போல் தெரியவில்லை.
நான் சிஎஸ்கே அணியில் இருந்த போது தோனி மற்றும் பயிற்சியாளர் பிளமிங் ஆகியோர் வீரர்களிடம் உங்களுடைய பணி இதுதான் என்று ஒருவருக்கு ஒவ்வொரு ரோலை கொடுத்து விடுவார்கள். அதற்கு தகுந்தார் போல் நாங்கள் தயாராவோம். ஆனால் இந்த ஏலம் முடிந்த பிறகும் சிஎஸ்கே அணியின் சில குறைகள் இருக்கிறது. அதை நிவர்த்தி செய்ய சிஎஸ்கே போராடி வருகிறது.
கடந்த போட்டியில் சிஎஸ்கே அணி ஒரு நல்ல பேலன்ஸ் ஆன அணியை தயார் செய்தது கான்வே, ரச்சின் ரவீந்திரா ஆகியோரை தொடக்க வீரர்களாக களம் இறக்கினார்கள். இது ஒரு நல்ல பலமான ஜோடி என்று நான் கருதுகிறேன். இதேபோன்று ருதுராஜ் மூன்றாவது வீரராக களம் இறங்குகிறார். ஆனால் திருப்பாதி தொடக்க வீரராக களம் இறக்கிய போது அணியில் பல ஓட்டைகள் இருந்தது.
தற்போது சிஎஸ்கே அணி என்ன மாற்றங்களை செய்ய வேண்டும் என்பதை கண்டுபிடித்து இருக்கும். இன்னும் தொடர் போகப் போக அவர்கள் தங்களது அணியின் காம்பினேசனை கண்டுபிடித்து வெற்றி பாதைக்கு திரும்புவார்கள். குறிப்பாக சிஎஸ்கே வின் பேட்டிங்கை பொறுத்த வரை முதல் மூன்று அல்லது நான்கு வீரர்கள் அதிரடி காட்டி இன்னிங்சை கட்டமைக்க வேண்டும். இதை அவர்கள் செய்தார்கள் என்றால் அணியின் நடுவரிசை வீரர்கள் இயல்பாக விளையாட வார்ங்கள். சிஎஸ்கே ஏற்படுத்திய நல்ல தொடக்கத்தை அவர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள்.
சிஎஸ்கே அணி அவ்வளவுதான் என்று யாரும் நினைத்து விட வேண்டாம். ஏனென்றால் அவர்களுக்கு எப்படி வெற்றி பெற வேண்டும் என்று நன்றாக தெரியும். அது பிளம்மிங் ஆக இருக்கட்டும், தோனியாக இருக்கட்டும் ஒட்டுமொத்த அணியுமே வெற்றி பாதைக்கு எப்படி திரும்புவது என்பதை நன்கு அறிந்திருப்பார்கள்.சிஎஸ்கே அணியில் டாப் வரிசை வீரர்கள் நன்றாக விளையாடினால் நிச்சயம் மற்ற வீரர்கள் மீதான நெருக்கடி குறையும். ருதுராஜ் மூன்றாவது வீரராக களம் இறங்குவது அணியின் நிலைத்தன்மையை அதிகரிக்கும்.
தோனி இன்னும் நன்றாக விக்கெட் கீப்பிங் செய்து வருகிறார். இதைப் போன்று இன்னிங்சை பேட்டிங்கால் அபாரமாக முடிக்கும் திறனும் அவருக்கு இருக்கின்றது என்று வாட்சன் கூறியுள்ளார்.