நள்ளிரவு ஒரு மணி -ஸ்டீவ் ஸ்மித் சுய து கொண்டிருந்த காரியம் ,வீடியோவை வெளியிட்ட மனைவி ..!

நள்ளிரவு ஒரு மணி -ஸ்டீவ் ஸ்மித் சுய து கொண்டிருந்த காரியம் ,வீடியோவை வெளியிட்ட மனைவி ..!

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் ஆட்டம் அடிலெய்ட் மைதானத்தில் பரபரப்பாக இடம்பெற்று வருகிறது.

முதல் போட்டியில் அவுஸ்ரேலிய அணி வெற்றி பெற்றதுடன் இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெறும் நிலையில் அவுஸ்திரேலியாவின் ஆதிக்கம் தொடர்கிறது.

இந்த நிலையில் முதல் இன்னிங்ஸில் 93 ஓட்டங்களைப் பெற்று சதத்தை தவறவிட்டிருந்த ஸ்டீவ் ஸ்மித் தன்னுடைய ஹோட்டல் அறையில் நள்ளிரவு ஒரு மணியளவில் செய்து கொண்டிருந்த காரியம் அனைவருக்கும் வியப்பைத் தருகிறது.

அடுத்த நாள் போட்டி இருந்தும்கூட, ஸ்டீவ் ஸ்மித் நள்ளிரவு ஒரு மணியளவில் ஷடோ பிரக்டிஸ் (Shadow Batting ) என்று சொல்லப்படுகின்ற கனவுலகில் பேட் பண்ணுவது போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

திடீரென கண்விழித்த மனைவி வீடியோ செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு இருக்கிறார் ,ஓட்டங்களை தொடர்ச்சியாய் குவிக்க வேண்டும் என்று வேட்கையோடு ஸ்டீவ் ஸ்மித்தின் இந்த காரியம் சமூக வலைதளங்களில் ரசிகர்களால் அதிகம் பகிரப்படுகிறது.

முதல் இன்னிங்சில் 93 ஓட்டங்களை ஸ்மித் பெற்றிருந்தாலும், இரண்டாவத ு இன்னிங்சில் அவர் ஒற்றை இலக்கத்தோடு நடையை கட்டியமை குறிப்பிடத்தக்கது.

காணொளி ???