இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான ICC டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டி வருகின்ற ஜூன் மாதம் 18 ம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் ரசிகர்களது பலத்த எதிர்பார்ப்பு காணப்படுகின்றது.
இந்த நிலையில் இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான புஜாரா ஒரு பேட்டியில், நாங்கள் யாரையும், எங்கேயும் வைத்தும் வீழ்த்தும் வல்லமை பொருந்திய அணி என குறிப்பிட்டுள்ளார்.
இதனடிப்படையில் புள்ளிவிபரங்கள் சிலவற்றை ஆராய்ந்தோம்.
புஜாரா ஒட்டுமொத்தத்தில் 85 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கிறார், 18 சதம், 29 அரைச்சதம் அடங்கலாக 6244 ஓட்டங்களை 46 எனும் சராசரியில் பெற்றிருக்கிறார்.
ஆனால் இங்கிலாந்து மண்ணில் 9 டெஸ்ட்டில் 29.41 எனும் சராசரியில் 500 ஓட்டங்களை மட்டுமேதான் பெற்றிருக்கின்றார். அங்கே விளையாடிய 18 இன்னிங்ஸ்களில் 11 தடவை 25 க்கும் குறைவான எண்ணிக்கையில் ஆட்டமிழந்துள்ளதுடன் அவற்றில் 6 ஒற்றை இலக்ககங்களுடனான ஆட்டமிழப்பாகும்.
இறுதி 3 வெளிநாட்டு தொடர்களில் 8 டெஸ்ட்டில் 26.93 எனும் சராசரியில் 4 அரைசதங்கள் அடங்கலாக 431 ஓட்டங்களை புஜாரா குவித்துள்ளார்.
மேற்கிந்திய தீவுகள்-2 டெஸ்ட் -60 ஓட்டங்கள்.
நியூசிலாந்து-2 டெஸ்ட் -100 ஓட்டங்கள்.
அவுஸ்திரேலியா -4 டெஸ்ட்-271 ஓட்டங்கள்
வெளிநாட்டு மண்ணில் புஜாராவின் பெறுதிகள் அவ்வளவு ஆரோக்கியமானதாக இல்லாவிடினும் இறுதியாக அவர் அவுஸ்திரேலியாவில் ஆடிய ஆட்டங்கள் அனைத்தும் ரசிகர்களுக்கு நம்பிக்கையை கொடுத்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.