“நாங்கள் வனிந்துவைப் பற்றி ஆய்வு செய்தோம், போட்டி முழுவதும் வனிந்து எங்களுக்கு சவாலாயிருப்பர் ” – ஜோஷ் ஹேசில்வுட்..!

“நாங்கள் வனிந்துவைப் பற்றி ஆய்வு செய்தோம், போட்டி முழுவதும் வனிந்து எங்களுக்கு சவாலாயிருப்பர் ” – ஜோஷ் ஹேசில்வுட்..!

இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகம் இருப்பதாக தாம் நம்புவதாகவும், எந்த சூழ்நிலையிலும் சர்வதேச வீரராக தாம் உட்பட அணி ஒவ்வொரு மாற்றத்தையும் எதிர்கொள்ள வேண்டும் என்றும் அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய அணியின் இலங்கை சுற்றுப்பயணம் தொடர்பாக இணையத்தில் நேற்று (5) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த ஹேசில்வுட் கூறியதாவது:

“இலங்கையில் உள்ள ஆடுகளங்களில் பெரிய வித்தியாசம் உள்ளது. இந்த மெதுவான பிட்ச் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு அதிக ஆதரவு கிடைக்கும்.

சமீபத்தில் நாங்கள் விளையாடிய இந்தியன் பிரீமியர் லீக்கில், பவுன்ஸ் கொண்ட பிட்சுகள் கிடைத்தன. ஆனால் நாங்கள் வெவ்வேறு ஆடுகளங்களில் விளையாட வேண்டும். எனவே, சர்வதேச வீரர்களாகிய நாம் எந்த நாட்டின் நிலைமைகளுக்கும் ஏற்ப இருக்க வேண்டும்.

மேலும், வனிது ஹசரங்க குறித்து கருத்து தெரிவித்த அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்.

“கடந்த ஐபிஎல்லில் வனிந்துவுடன் விளையாடும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது, அவரைப் பற்றி எங்களால் சில ஆய்வுகளை மேற்கொள்ள முடிந்தது. க்ளென் மேக்ஸ்வெல் என்னை விட வனிந்து மீது அதிக கவனம் செலுத்தினார் என்பதில் சந்தேகமில்லை,

எனவே வனிந்துவைப் பற்றி மேக்ஸ்வெல் நன்கு புரிந்து கொண்டுள்ளார் என்று நான் நம்புகிறேன். எவ்வாறாயினும், வனிந்து ஹசரங்க ஒரு தனித்துவமான வீரர், சிறந்த விக்கெட்டுகளை வீழ்த்தக்கூடிய பந்துவீச்சாளர் என்று நான் நம்புகிறேன்.

போட்டி முழுவதும் ஆஸ்திரேலிய அணிக்கு வனிது பெரும் சவாலாக இருப்பார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியாளர் சந்திப்பை கீழே பாருங்கள்