குறுகிய கால மற்றும் நீண்ட கால அடிப்படையில் தேசிய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண இலங்கை பிரஜைகளுக்கு உடனடி தீர்வுகள் தேவை என இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் நேர்காணலின் போது பேசிய சங்கக்கார, 21 மில்லியன் மக்கள் வாழும் நாட்டை வெறும் 226 பேர் மட்டுமே அழித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
நாம் அனைவரும் தேர்ந்தெடுத்த தலைவர்கள் மோசமான கொள்கைகளை வைத்துள்ளனர் என்றும் மோசமான நிதி நிர்வாகத்தை மேற்கொண்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
அதைவிட மோசமாக அவர்கள் தங்கள் சொந்த மக்களை இந்த உயிருக்கு ஆபத்தான சூழ்நிலைக்கு கொண்டு வந்ததற்கு முற்றிலும் வருத்தம் காட்டவில்லை என்றும் அவர் சாடினார்.
ஊழலுக்கும், உறவினர்களுக்கு பதவிகளை வழங்குவது மற்றும் குடும்ப ஆட்சியை கொண்டு செல்வதற்கு இடமளிக்கக் கூடாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
DailyCeylon