நான் அடுத்த தோனியாக விரும்புகிறேன் சவால் விடுக்கும் அவுஸ்ரேலியாவின் இளம் வீரர்..!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி நட்சத்திரமும், உலகின் முதல் நிலை பினிஷர் எனவும் கருதப்படுகின்ற தோனி இடத்தை பிடிக்க அவுஸ்திரேலிய வீரர் வீரர் ஒருவர் சவால் விடுத்துள்ளார்.
குறிப்பாக டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடி வரும் அவுஸ்திரேலியாவின் சகலதுறை ஆட்டக்காரரான மார்க்ஸ ஸ்டாய்னிஸ் தெரிவித்திருக்கும் கருத்துக்களின் அடிப்படையில், அடுத்து வரும் மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு அவுஸ்ரேலியாவின் பினிஷராக அல்லாது உலகின் மிகச்சிறந்த பினிஷராக விரும்புகிறேன் என தெரிவித்தார்.
ஏற்கனவே உலகின் மிகச்சிறந்த பினிஷேர் அவுஸ்ரேலியாவின் மைக்கல் பெவனா இந்தியாவின் தோனியா என எல்லோரிடையிலும் வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில் இப்போது இப்போது இவரது கருத்து வந்தடைந்திருக்கிறது.
ஆகவே ஸ்டொய்னிஸ் அடுத்த பெவனா அல்லது தோனியா என்பதும் கேள்விக்குரியதே.
டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் ஸ்டொய்னிஸ் மிகச்சிறப்பாக பினிஷர் பங்களிப்பை அந்த அணிக்கு வழங்கி வருகின்றமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.