நான் உன்னை முதன்முதலில் சந்தித்த தருணத்தை இன்னும் நினைவில் வைத்திருக்கிறேன்- இர்பான் பதான்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சகலதுறை வீரரான இர்பான் பதான் இன்று தனது திருமண நாளை கொண்டாடிக் கொண்டிருக்கின்றார்.
அது தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் இர்பான் பதான் ஒரு உருக்கமான பதிவை இட்டுள்ளார்.
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் என் அன்பே. நான் உங்களை முதன்முதலில் சந்தித்த தருணத்தை இன்னும் நினைவில் வைத்திருக்கிறேன், அந்த உணர்வு கொஞ்சம் கூட மாறவில்லை ,LoveU என்று இர்பான் பதான் பதிவிட்டுள்ளார்.
4 வருடங்களுக்கு முன்னர் இர்பான் பதான் ,சபா பைக் எனும் பெண்ணை மணந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.