நாமலின் கோரிக்கையை ஏற்பாரா பானுக ராஜபக்ச- நாமல் விடுத்த திடீர் அழைப்பு..!

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதற்கு மேற்கொண்ட தீர்மானத்தை மீள் பரிசீலனை செய்யுமாறு இலங்கை அணி வீரர் பானுக ராஜபக்ஸவிடம் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ கோரிக்கை விடுத்துள்ளார்.

இளைய விளையாட்டு வீரர் ஒருவர் என்ற வகையில் நாட்டுக்காக விளையாட மேலும் காலம் எஞ்சியுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில் அவசர தீர்மானங்களை மேற்கொள்வதை விட சவால்களுக்கு முகங்கொடுத்து முன்னோக்கி செல்வதே மிக முக்கியமானதாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், விளையாட்டு வீரர்களுக்கு தமது தனிப்பட்ட காரணங்களுக்காக ஓய்வு பெறும் முழு உரிமையும் காணப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், அவ்வாறான தீர்மானமொன்றை மேற்கொள்வதற்கு முகாமைத்துவத்துடன் ஏற்படும் சிக்கல்கள் அல்லது ஏதேனும் அசாதாரண நிலைமைகள் ஏற்பட்டிருக்குமானால் அது தொடர்பில் தலையீடு செய்வதற்கு தனக்கு சந்தர்ப்பம் காணப்படுவதாகவும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

மேலும், ஒரு வீரர் அல்லது ஒரு சிலரை மாத்திரம் மையப்படுத்தி முழு சட்டக் கட்டமைப்பையும் மாற்ற முடியாது எனவும், அவ்வாறு செய்தால், முழு செயற்பாடும் வீழ்ச்சியடையும் அபாயம் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் அடிப்படையில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதற்கு மேற்கொண்ட தீர்மானத்தை மீள் பரிசீலனை செய்யுமாறு இலங்கை அணி வீரர் பானுக ராஜபக்ஸவிடம் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#Capital News