நாமல் பதவி விலகினார்…!

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தனது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள் காரணமாக எழுந்துள்ள ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களையும் தொடர்ந்து விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச பதவி விலகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னதாக ராஜாங்க அமைச்சர்கள் சிலர் பதவி விலகி உள்ள நிலையில் முக்கியமான அமைச்சுப் பொறுப்புக்களில் இருந்து ஒருவரான ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த நாமல் பதவி விலகல் முக்கிய விடயமாக நோக்கப்படுகிறது.