இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய மோசமான செயற்பாடுகளும் வீழ்ச்சி நிலைமையிலிருந்து ஸ்ரீலங்கா கிரிக்கெட் மற்றும் இலங்கை அணியையும் எழுச்சிக்கு உட்படுத்த முடியுமாக இருந்தால், அது தற்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவால் மட்டுமே முடியும் என்று முன்னாள் இலங்கை அணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அர்ஜுன ரணதுங்க கருத்து தெரிவித்துள்ளார் .
இலங்கையின் தனியார் தொலைக்காட்சி ஊடகம் ஒன்றில் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார் .
அரசியல் பலம் ,ஆளுமை இவை எல்லாவற்றையும் வைத்து பார்க்கின்றபோது தற்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவிற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட்டை எழுச்சிக்கு உட்படுத்தமுடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார் .
விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவின் தந்தையார் பிரதமராகவும் ,சிறிய தந்தையார் ஜனாதிபதியாகவும் உள்ளமையும் இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.