நாளைய T20 போட்டி தொடர்பில் கோஹ்லி வெளியிட்ட அணி விபரம்.

இங்கிலாந்து அணிக்கெதிரான நாளைய நாளில் ஆரம்பமாகவுள்ள இருபதுக்கு இருபது தொடரில் பங்கேற்றவுள்ள அணி விபரத்தை கோஹ்லி வெளியிட்டுள்ளார்.

அதன்படி நாளைய போட்டியில் ரோஹித் சர்மா மற்றும் ராகுல் ஆகியோர் ஆரம்ப வீரர்களாகவும், விக்கெட் காப்பாளராக பான்டும் விளையாடுவார்கள் என்று கோஹ்லி தெரிவித்தார்.

ரோஹித் சர்மா மற்றும் ராகுல் ஆகிய இந்த இருவரும் 18 இன்னிங்ஸ்களில் ஆரம்ப வீரர்களாக விளையாடி 59.94 எனும் சராசரியில் 1,019 ஓட்டங்களை குவித்துள்ளனர்.
3 சத இணைப்பாட்டமும், 7 அரைச்சத இணைப்பாட்டமும் இந்த ஜோடி புரிந்துள்ளது.

இதேநேரம் சூரியகுமார் யாதவ் நாளைய போட்டியில் அறிமுகமாக வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

video link.