நியூசிலாந்துக்கு எதிராக தொடரை வென்று வரலாறு படைத்தது இந்தியா…!

T20 சர்வதேச போட்டிகளின் வரலாற்றில், நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி  போட்டியில் இந்திய அணி 168 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது,

ஒரு போட்டியில் இந்திய அணி பெற்ற அதிகபட்ச ஸ்கோர் வித்தியாசத்திலான வெற்றியாகவும் இந்த வெற்றி பதிவானது.

டெஸ்ட் அந்தஸ்துடைய நாட்டிற்கு எதிராக அதிக ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியாகவும் இது வரலாறு படைத்தது. அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றதன் மூலம், போட்டியிலும் 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா, ஷுப்மான் கில்லின் சூப்பர் சதத்தால் வலுப்பெற்று 4 விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் எடுத்தது.

கில் 63 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 126 ரன்கள் எடுத்தார். அவரது இன்னிங்ஸில் 7 சிக்ஸர்கள் மற்றும் 12 பவுண்டரிகள் அடங்கும். ராகுல் திரிபாதி 44 . நான்காவது விக்கெட்டுக்கு ஹர்திக் பாண்டியா மற்றும் ஷுப்மான் கில் ஜோடி 40 பந்துகளில் 103 ரன்கள் சேர்த்தனர். பாண்டியா 17 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார்.

பந்துவீச்சில் மைக்கல் பிரேஸ்வெல், பிளேயர் டிக்னர், இஷ் சோதி மற்றும் டெரில் மிட்செல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

பதில் இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து அணி 12.1 ஓவர்கள் முடிவில் 66 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இன்னிங்ஸின் முதல் 4 விக்கெட்டுகள் 7 ரன்களுக்கு வீழ்ந்தன, மேலும் நியூசிலாந்து அணிக்காக டாரில் மிட்செல் அதிக ரன்கள் எடுத்தார். அவர் 35 ரன்களில் ஆட்டமிழக்க, மிட்செல் சான்ட்னர் 13 ரன்கள் எடுத்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் யாரும் 10 ரன்களை கடக்கவில்லை.

பந்துவீச்சில் ஹர்திக் பாண்டியா 16 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், ஷிவம் மாவி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை பகிர்ந்து கொண்டனர்.

போட்டியின் நாயகனாக சுப்மன் கில்லைம் தொடர் நாயகனாக அணித் தலைவர் ஹர்திக் பாண்டியா தொடர் நாயகனாகவும் தேர்வாகினர், இந்த வெற்றியானது இந்தியாவிற்கு கிடைத்திருக்கிறது தொடர்ச்சியான 25வது தொடர் வெற்றியாக அமைந்து இருக்கிறது.

அதாவது அனைத்து வகையான ஆட்டங்களிலும் இந்தியா சொந்த மண்ணில் தொடரை இழக்காமல் தொடர்ந்து 25 தொடர்களில் வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளது

எமது YouTube தளத்திற்கு செல்வதற்கு 👇