நியூசிலாந்துக்கெதிரான டெஸ்ட்டில் ஆஸி முன்னிலை ..!

கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லி ஓவல் மைதானத்தில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாளில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்கள் நியூசிலாந்தின் முதல் இன்னிங்ஸை 162 ரன்களுக்கு மட்டுப்படுத்த முடிந்தது.

அபாரமாக பந்துவீசிய ஜோஸ் ஹெசல்வுட் 31 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க் 59 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி நியூசிலாந்து இன்னிங்ஸை மட்டுப்படுத்தினர்.

நியூசிலாந்து இன்னிங்சில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் டாம் லாதம் 7 பவுண்டரிகளுடன் 38 ரன்களும், மேத்யூ ஹென்றி 5 பவுண்டரிகளுடன் 29 ரன்களும், கேப்டன் டிம் சவுத்தி ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 26 ரன்களும் எடுத்தனர்.

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்து முதல் நாள் ஆட்டத்தை நிறுத்தியது.

ஆஸ்திரேலிய இன்னிங்ஸில் விழுந்த 4 விக்கெட்டுகளில் 3 விக்கெட்டுகளை மேத்யூ ஹென்றி கைப்பற்றினார்.

அதன்படி, நியூசிலாந்தை விட ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுகள் கையிருப்பில் இருக்க 38 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்தது,  மனாஸ் லாபுசேன் 8 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காது 45 ரன்கள் எடுத்தார்.