நியூசிலாந்துடனான தொடரில் அதிரடி மாற்றங்களுடன் புதிய அணியைக் களமிறக்கப்போகும் இந்தியா…!

நியூசிலாந்துடனான தொடரில் அதிரடி மாற்றங்களுடன் புதிய அணியைக் களமிறக்கப்போகும் இந்தியா…!

இந்திய, நியூசிலாந்து அணிகளுக்கிடையில் எதிர்வரும் 17ஆம் திகதி ஆரம்பமாகும் டுவென்டி டுவென்டி தொடருக்கான இந்திய அணியில் பலவிதமான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகின்றன.

அணித்தலைவராக லோகேஷ் ராகுல் விளையாடுவார் என சொல்லப்பட்டாலும், ரோகித் சர்மா தலைமைத்துவத்தை பொறுப்பேற்க இருப்பதாக செய்திகள் குறிப்பிடுகின்றன.

புவனேஷ்வர் குமார் மற்றும் ஹார்திக் பாண்டியா ஆகிய இருவரையும் அணியில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ருத்ராட்ஜ் கெய்க்வாட், வெங்கடேஷ் ஜயர், அவேஷ் கான் ஆகியோர் நியூசிலாந்து அணியுடனான போட்டிகளில் இந்திய அணியில் தேர்வாக இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

உலகக்கிண்ணத்தில் இந்திய அணியின் தோல்விக்கு  பின்னர் இந்திய கிரிக்கெட் அணியை மறு சீரமைக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன, ஆனாலும் இது தொடர்பில் இந்திய கிரிக்கட் சபை எதுவும் உறுதிப்படுத்தவில்லை.