நியூசிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளருக்கு உபாதை- அணிக்குள் அதிரடியாக நுழையும் மின்னல் வேக பந்து வீச்சாளர்..!

நியூசிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளருக்கு உபாதை- அணிக்குள் அதிரடியாக நுழையும் மின்னல் வேக பந்து வீச்சாளர்..!

நியூஸிலாந்தின் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கான அணியில் இடம்பெற்றிருந்த வேகப்பந்துவீச்சாளர் லொக்கி பேர்குசன் உபாதை காரணமாக அணியில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்த பேர்குசன் உடல் உபாதைகளால் அவதி பட்டு வரும் நிலையில் உலக்கிண்ணத்தை தவறவிடுகிறார்.

இதன் காரணத்தால் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய மின்னல் வேக பந்துவீச்சாளர் அடம் மில்ன் அணியில் இணைக்கப்பட இருப்பதாக செய்திகள் குறிப்பிடுகின்றன.