நியூசிலாந்து சந்திக்கப்போகும் பாகிஸ்தான் அணிக்கு புதிய பயிற்சியாளரை நியமிக்க தீர்மானம், இரண்டு முன்னாள் வீரர்கள் போட்டியில்..!

நியூசிலாந்து சந்திக்கப்போகும் பாகிஸ்தான் அணிக்கு புதிய பயிற்சியாளரை நியமிக்க தீர்மானம், இரண்டு முன்னாள் வீரர்கள் போட்டியில்..!

பாகிஸ்தானுக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொள்ளவுள்ள நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டுவென்டி டுவென்டி தொடரில் பங்கேற்கவுள்ள பாகிஸ்தான் அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர் நியமிக்கப்படவுள்ளார்.

ஏற்கனவே தலைமை பயிற்சியாளராக செயல்பட்டுவரும் மிஷ்பாஹ் உல் ஹக் கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இந்த தொடருக்கு , தற்காலிக தலைமை பயிற்சியாளராக இரண்டு பாகிஸ்தான் முன்னாள் வீரர்களான வக்கார் யூனுஸ் ,   தேசிய உயர் செயல்திறன் மையத்தின் வீரர் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராக உள்ள சக்லைன் முஷ்டாக் ஆகிய இருவரில் ஒருவர் பயிற்சியாளராக நியமிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.

3 ஒருநாள் போட்டிகளிலும் 5 T20 போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து பாகிஸ்தான் அணியை சந்திக்கவுள்ளது.