நியூசிலாந்து பாகிஸ்தானை வென்றது..!

பாகிஸ்தானுக்கு எதிரான நான்காவது டி20 கிரிக்கெட் போட்டியில் டிம் ராபின்சனின் அரை சதம் மற்றும் வில்லியம் ஓ ரூர்க்கின் சிறப்பான பந்துவீச்சால் சுற்றுலா நியூசிலாந்து அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் சிறந்த வெற்றியை பதிவு செய்தது.

வியாழக்கிழமை இரவு லாகூரில் நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து பெற்ற இந்த வெற்றியின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரில் நியூசிலாந்து அணி 2-1 என முன்னிலை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் மற்றும் காயங்கள் போன்ற பல்வேறு காரணங்களால் சுமார் 15 முக்கிய வீரர்கள் இல்லாமல் நியூசிலாந்து அணி இந்த சுற்றுப்பயணத்தில் இணைகிறது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 178 ஓட்டங்களைப் பெற்ற நிலையில், பதில் இன்னிங்ஸை விளையாடிய பாகிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்புக்கு 174 ஓட்டங்களை மாத்திரமே சேகரிக்க முடிந்தது.