நியூசிலாந்து A அணியை சந்திக்கவுள்ள இந்திய அணிக்கு கில் தலைவர்- அணிவிபரம்..!

நியூசிலாந்து A அணிக்கு எதிராக ஷுப்மான் கில் இந்திய A அணிக்கு தலைமை தாங்குவார் என்றும் சர்ஃபராஸ் கான் & ஷம்ஸ் முலானி ஆகியோர் அணியில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

இளம் இந்திய வீரர் ஷுப்மான் கில் மூன்று 4 நாள் போட்டிகள் மற்றும் பல List A ஆட்டங்களில் இந்தியாவின் A அணியை வழிநடத்த உள்ளார்.

அடுத்த மாதம் நியூசிலாந்து A அணிக்கு எதிரான சுற்றுப்பயணத்திற்கான அட்டவணை ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது, முதல் தர போட்டிகள் பெங்களூரில் செப்டம்பர் 1-4, 8-11 மற்றும் 15-18 மற்றும் செப்டம்பர் 22, 25 ஆகிய திகதிகளில் சென்னையில் வெள்ளை பந்து போட்டிகள் நடைபெற உள்ளன.

நான்கு நாள் போட்டிகளில், வாஷிங்டன் சுந்தர், ஹனுமா விஹாரி, ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ் மற்றும் வெள்ளை பந்து ஆட்டங்களுக்கு, இஷான் கிஷன், பிருத்வி ஷா, ருதுராஜ் கெய்க்வாட், பிரசித் கிருஷ்ணா, ராகுல் சாஹர், வெங்கடேஷ் ஐயர், மற்றும் ரிஷி தவான் ஆகியோர் இடம்பெற வாய்ப்புள்ளது.

இந்தியா ‘A’ அணி விபரம் ?

4-நாட்கள் போட்டி

ஷுப்மான் கில் (தலைவர்), யாஷ் துபே, ஹனுமா விஹாரி, ரஜத் படிதார், சர்ஃபராஸ் கான், வாஷிங்டன் சுந்தர், கேஎஸ் பாரத் (wk), ஷம்ஸ் முலானி, ஜலஜ் சக்சேனா, ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுபம் சர்மா, அக்ஷய் வாட்கர் (DK), ஷாபாஸ் அகமது, மணிசங்கர் முரசிங்.

ஒரு நாள் போட்டி:

ஷுப்மான் கில் (தலைவர்), பிருத்வி ஷா, ருதுராஜ் கெய்க்வாட், ஹனுமா விஹாரி, இஷான் கிஷன் (wk), ரிஷி தவான், வாஷிங்டன் சுந்தர், பிரவீன் துபே, மயங்க் மார்கண்டே, பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், கே.எஸ். பாரத் (wk), வெங்கடேஷ் ஐயர், ராகுல் சாஹர், புல்கித் நரங், யாஷ் தயாள்.

உள்ளக தகவல்களின்படி மேற்குறித்த வீரர்கள் அணிகளில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.