இங்கிலாந்தில் வரும் ஜூன் மாதம் இடம்பெறவுள்ள டெஸ்ட் உலக கிண்ணம் என்று அழைக்கப்படும் ICC டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கு கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து தகுதி பெற்றுள்ளது.
இந்த நிலையில் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை சந்திக்கும் வாய்ப்பு இந்தியாவுக்கு காணப்படுமா எனும் கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இங்கிலாந்துடனான டெஸ்ட் போட்டிகள் அதற்கான பதிலை வழங்கும் என்று காத்திருக்கலாம்.
இங்கிலாந்துடனான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 4-0 , 3-1 , 3-0, 2-1, 2-0, என்று கைப்பற்றினாலே இந்தியாவுக்கு இறுதி போட்டியில் மோதும் சந்தர்ப்பம் கிட்டும் வாய்ப்புள்ளது.
இங்கிலாந்து அணி இறுதி போட்டிக்கு தகுதி பெறுவதாக இருந்தால் 3-0, 3-1 அல்லது 4-0 என்று இந்தியாவை இங்கிலாந்து வெற்றிகொள்ள வேண்டும்.
எதுஎவ்வாறாயினும் சொந்த மண்ணில் சூரர்களாக காணப்படும் இந்திய அணியை வெற்றிகொண்டு, இங்கிலாந்தால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளின் இறுதி போட்டிக்கு செல்ல முடியுமா என்பது கேள்விக்குரியதே.