நியூஸிலாந்தை சந்திக்கவுள்ள பாகிஸ்தான் அணி விபரம் அறிவிப்பு- சிரேஸ்ட வீரர்கள் நீக்கம், இளம் வீரர்கள் பலர் சேர்ப்பு ..!

நியூஸிலாந்தை சந்திக்கவுள்ள பாகிஸ்தான் அணி விபரம் அறிவிப்பு- சிரேஸ்ட வீரர்கள் நீக்கம், இளம் வீரர்கள் பலர் சேர்ப்பு ..!

பாகிஸ்தான் கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொள்ளவுள்ள நியூஸிலாந்து அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் இடம்பெறவுள்ளது.

செப்டம்பர் 17, 19, 21 ஆகிய தினங்களில் 3 ஒருநாள் போட்டிகள் இடம்பெறவுள்ளன.

இதற்கான பாகிஸ்தான் அணியின் விபரம் வெளியாகி இருக்கிறது, பாபர் அசாம் தலைமையில் அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த அணியில் சிரேஷ்ட வீரர்களான சப்ராஸ் அகமட், ஷான் மசூத் ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக 20 வயதான விக்கெட் காப்பாளர் மொகமட் ஹாரிஸ் அதேபோன்று வேகப்பந்து வீச்சாளர் மொகமட் வசிம் ஆகிய வீரர்கள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

முகமது ரிஸ்வான் முதல் தேர்வு விக்கெட் கீப்பராக இருக்கிறார், எனவே, சர்பராஸ் அகமதுவுக்கு பதிலாக 20 வயதான முகமது ஹாரிஸை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

முந்தைய சீசனில் ஹாரிஸின் சிறந்த உள்ளூர் போட்டிகளுக்கான திறமை வெளிப்பாடுக்காக வாய்ப்பு அளிப்பதோடு மட்டுமல்லாமல், சர்வதேச கிரிக்கெட்டின் அனுபவத்தை வழங்கி தயாராக இருக்கும் இளம் விக்கெட் கீப்பர்களை நாங்கள் தொடர்ந்து வளர்ப்பதை உறுதி செய்வதாகும். வாய்ப்பு கிடைக்கும்போது முன்னேற வேண்டும் எனவும் பிரதம தேர்வாளர் தெரிவித்தார்.

அறிவிக்கப்பட்டிருக்கும் 20 பேர் கொண்ட அணி விபரம்.

பாபர் ஆஸம் (தலைவர் ), ஷதாப் கான் (உதவி தலைவர் ), முகமட் ரிஸ்வான் (WK), முகமது ஹாரிஸ் (WK), அப்துல்லா ஷஃபிக், ஃபஹீம் அஷ்ரப், ஃபகார் ஜமான், ஹாரிஸ் ரவுப், ஹசன் அலி, இப்திகார் அகமது, இமாம்-உல்-ஹக், குஷ்தில் ஷா , முகமது ஹஸ்னைன், முகமது நவாஸ், முகமது வாசிம் ஜூனியர், சவுத் ஷகீல், ஷாஹீன் ஷா, ஷாநவாஸ் தஹானி, உஸ்மான் காதர், ஜாஹித் மெஹ்மூத்