நிறைய கேள்விகள் இருக்கு.. ஒரு பார்ட்னர்ஷிப்பையும் உருப்படியாக உருவாக்கவில்லை.. புலம்பிய ஹர்திக்!

நிறைய கேள்விகள் இருக்கு.. ஒரு பார்ட்னர்ஷிப்பையும் உருப்படியாக உருவாக்கவில்லை.. புலம்பிய ஹர்திக்!

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் பார்ட்னர்ஷிப்பை உருவாக்காமல் விளையாடியதே தோல்விக்கு காரணம் என்று மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் கேகேஆர் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு பின் வான்கடே மைதானத்தில் மும்பை அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி சாதனை படைத்துள்ளது. இந்த போட்டியில் கொல்கத்தா அணி நிர்ணயித்த 170 ரன்கள் இலக்கை விரட்டிய மும்பை அணி வெறும் 145 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது.

இதன் மூலம் மும்பை அணியின் பிளே ஆஃப் கனவும் முடிவுக்கு வந்துள்ளது. இதுவரை 11 போட்டிகளில் விளையாடிய மும்பை அணி 3 வெற்றி, 8 தோல்வி என்று வெறும் 6 புள்ளிகள் மட்டுமே பெற்று புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் இருக்கிறார். இதனால் 4வது சீசனாக தொடர்ந்து மும்பை அணி தோல்வியடைந்தது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இந்த தோல்வி குறித்து மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேசுகையில், எங்களால் சரியாக பார்ட்னர்ஷிப்பை உருவாக்க முடியவில்லை. சில ஓவர்களுக்கு இடையிலேயே விக்கெட்டை பறி கொடுத்தோம். டி20 கிரிக்கெட்டில் நல்ல பார்ட்னர்ஷிப்பை உருவாக்க முடியவில்லை என்றால், அது மிகப்பெரிய பிரச்சனையை கொடுக்கும். டாஸில் பாலில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை விட்டுக் கொடுத்ததை பார்த்த போது, ஏராளமான கேள்விகள் மனதிற்குள் தோன்றியது.

ஆனால் அதற்கான பதில்கள் அளிக்க இன்னும் கொஞ்சம் நேரம் தேவை. பெரிதாக எந்த பதிலும் இல்லை. பவுலர்கள் சிறப்பாக பணியை செய்து முடித்தார்கள். நாங்கள் பேட்டிங் செய்ய களமிறங்கும் போது பிட்சிலும் கொஞ்சம் மாற்றம் இருந்தது. அதேபோல் பேட்ஸ்மேன்களுக்கு உதவியாக எதிர்பார்த்ததை போல் பனிப்பொழிவும் இருந்தது. ஆனால் சேஸிங் செய்ய முடியாமல் தவறவிட்டுவிட்டோம். இந்த போட்டியில் நடந்த தவறை எப்படி திருத்த வேண்டும் என்று ஆராய்வோம்.

தோல்வியின் போது தொடர்ந்து போராட வேண்டும் என்பதையே எனக்குள் சொல்லி வருகிறேன். போராட்டத்தில் இருந்து பாதியுடன் விலகி செல்லக் கூடாது. கடினமான நாட்கள் வரலாம்.. ஆனால் நிச்சயம் மகிழ்ச்சியான நாட்களும் அருகில் தான் உள்ளது. நிச்சயம் இது எங்களுக்கும் சவாலாக காலம் தான். ஆனால் சவால்களே நம்மை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தி செல்லும் என்று தெரிவித்தார்.