நீர்கொழும்பில் அமைதியின்மை…!

நீர்கொழும்பில் அமைதியின்மை…!

நீகொழும்பில் இரு குழுக்களுக்கிடையில் அமைதியின்மை ஆரம்பமாகியுள்ளதாக அறிந்து கொள்ளமுடிகிறது.

அவென்ரா கார்டன்ஸ் மற்றும் கிராண்டீசா ஹோட்டல்களுக்கு அருகில் உள்ள சாலைகளில் குழுக்கள் தீவைத்துள்ளன.

ஒரு பிரதேச அரசியல்வாதியின் ஆதரவுடன் கூடிய குழுவொன்று அப்பகுதியிலுள்ள வீடுகளை கொள்ளையடிப்பதில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டித் தாக்கியதைத் தொடர்ந்து சண்டை தொடங்கியதாக சில தகவல்கள் விவரிக்கின்றன.

தற்போது சம்பவ இடத்திற்குச் சென்று நிலைமையைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Previous articleபாடகர் இராஜின் இல்லம் தாக்கப்பட்டது …! (Video)
Next articleஅடுத்த T20 உலகக் கோப்பையில் இலங்கையின் முக்கிய வீரர்கள் குறித்து மஹேல கருத்து..!