நூற்றுக்கும் குறைவான பந்துகளை சந்தித்து அதிக டெஸ்ட் சதமடித்தோர் விபரம்…!

டெஸ்ட் போட்டிகளில் அதிரடி ஆட்டம் ஆடி ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்த ஏராளம் அதிரடி மன்னர்களை நாம் கண்டிருக்கின்றோம், அதிலும் ஆரம்ப வீரர்களாக டெஸ்ட்டில் போட்டி ஆரம்பித்தது முதலே வாணவேடிக்கை நிகழ்த்துவதில் இந்தியாவின் விரேந்தர் சேவாக் முதன்மையானவர்.

விரேந்தர் சேவாக் டெஸ்ட் போட்டிகளில் அடித்த 23 சதங்களில் 100 க்கும் குறைவான பந்துகளை சந்தித்து 7 சதங்களை விளாசியுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் ஆடம் கில்கிறிஸ்ட் டெஸ்ட்டில் அடித்த 17 சதங்களில் 100 க்கும் குறைவான பந்துகளை சந்தித்து 6 டெஸ்ட் சதமடித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் டேவிட் வோர்னர் (டெஸ்ட் சதம்-24), மேற்கிந்திய தீவுகளின் கிரிஸ் கெயில் (டெஸ்ட் சதம்-15), நியூசிலாந்தின் மக்கலம் (டெஸ்ட் சதம்-24) ஆகியோர் தலா 4 டெஸ்ட் சதங்களை நூற்றுக்கும் குறைவான பந்துகளில் அடித்துள்ளனர்.

இயன் பொத்தம், ஷாஹித் அப்ரிடி, ரோஸ் டெயிலர் ஆகியோர் 100 க்கும் குறைவான பந்துகளை சந்தித்து 3 டெஸ்ட் சதமடித்துள்ளார்.