நெதர்லாந்து உடனான தொடரை வென்று அசத்தியது பாகிஸ்தான்..!

நெதர்லாந்து உடனான தொடரை வென்று அசத்தியது பாகிஸ்தான்..!

நெதர்லாந்து சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணிக்கும் நெதர்லாந்து அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நிறைவுக்கு வந்துள்ளது.

நேற்று இடம்பெற்ற மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் கடுமையான போராட்டத்திற்கு மத்தியில் பாகிஸ்தான் அணி 9 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 206 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது, அதிகபட்சமாக பாபர் அசாம் 91 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

207 எனும் இலக்குடன் துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணிக்கு இறுதி ஓவரில் 16 ஓட்டங்கள் தேவைப்பட்டது, இருப்பினும் இறுதி ஓவரில் இறுதி விக்கெட்டும் வீழ்த்தப்பட 9 ஓட்டங்களால் பாகிஸ்தான் வெற்றியை தனதாக்கியது .

நஸீம் ஷா 5 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

முதலாவது ஒருநாள் போட்டியில் 16 ஓட்டங்களாலும், இரண்டாவது ஒருநாள் போட்டியில் 7 விக்கெட்டுக்களாலும், நேற்றைய போட்டியில் 9 ஓட்டங்களால் வெற்றி பெற்ற பாகிஸ்தான் 3-0 என தொடரை கைப்பற்றியுள்ளது.