நெய்மருக்கு மஞ்சள் அட்டை- அடுத்து வரும் போட்டியை தவறவிடும் அபாய நிலையில் ..!

நெய்மருக்கு மஞ்சள் அட்டை- அடுத்து வரும் போட்டியை தவறவிடும் அபாய நிலையில் ..!

பிரேசில் கால்பந்தாட்ட அணியின் முன்னணி நட்சத்திரமான நெய்மர் நேற்று இடம்பெற்ற பேரு அணியுடனான உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளில் மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டமை  குறிப்பிடத்தக்கது .

நேற்று இடம்பெற்ற பரபரப்பான போட்டியில் 2-0 எனும் அடிப்படையில் பிரேசில் அணி வெற்றி பெற்றது.

2-0 என பிரேசில் வெற்றி பெறுவதற்கும் நெய்மரின் பங்களிப்பு அளப்பரியதாக இருந்தது, ஆனால் ரசிகர்களுக்கு கவலை தரக்கூடிய விதத்தில் போட்டி நிறைவை நெருங்கும் தருவாயில் நெய்மருக்கு மஞ்சள அட்டை காண்பிக்கப்பட்டது.

இதனால் அடுத்து வரும் போட்டியை தவறவிடும் அபாயமான நிலைக்கு நைய்மர் தள்ளப்பட்டுள்ளார் வருகின்ற அக்டோபர் மாதம் 7ம் திகதி வெனிசுலா அணியை பிரேசில் சந்திக்கவுள்ளது.

அந்த போட்டியில் நெய்மர் விளையாட முடியாத நிலை உருவாகி உள்ளது.