நெய்மருடன் மீண்டும் கைகோர்க்கும் மெஸ்ஸி- பார்சிலோனாவிற்கு விடை கொடுக்கிறார் …!

பிரபல கால்பந்து நட்சத்திரமான லியோனல் மெஸ்ஸி, பார்சிலோனா கழகத்தில் இருந்து விடை பெற வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

ஏற்கனவே பார்சிலோனா கழகத்தில் விளையாடிய பிரேசில் நட்சத்திரம் நெய்மார், இப்போது பாரிஸ் சென்ட் ஜெர்மனி அணிக்காக விளையாடி வருகின்றார்.

இந்தநிலையில் மெஸ்ஸியையும் அந்த கழகம் இலக்கு வைத்து காத்திருப்பதாக பிரபல ஸ்பானிய கால்பந்து ஆர்வலர் கில்லெம் பாலகுக்கே கருத்துரைத்துள்ளார்.

33 வயதான மெஸ்ஸி, ஸ்பானிய கால்பந்தாட்ட கழகமான பார்சிலோனாவில் இருந்து விடைபெற்று PSG கழகத்தோடு கைகோர்க்க இருப்பதாக செய்திகள் கிடைத்திருக்கின்றமை முக்கியமானது.

லா லிகா கால்பந்து தொடரின் இறுதி குழுநிலை ஆட்டம் விளையாட இருந்த நிலையில், மெஸ்ஸிக்கு அதிலிருந்து ஓய்வு கொடுக்கப்பட்ட நிலையில், மெஸ்ஸி பார்சிலோனாவிற்கான தன்னுடைய இறுதி போட்டியை விளையாடி விட்டார் என்று சொல்லி சமூக வலைத்தளங்களில் செய்திகள் வரும் நிலையில், மெஸ்ஸி என்ன தீர்மானத்தை மேற்கொள்ளப் போகிறார்கள் என்று சொல்லி எதிர்பார்த்திருக்கலாம்.