நெய்மரை வெளியில் எடுத்து மெஸ்சியை களமிறங்கிய PSG கழகம்- முதல் போட்டியில் PSG அபார வெற்றி ..!

நெய்மரை வெளியில் எடுத்து மெஸ்சியை களமிறங்கிய PSG கழகம்- முதல் போட்டியில் PSG அபார வெற்றி ..!

கால்பந்து ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துக் காத்திருந்த மிக முக்கியமான கால்பந்தாட்டப் போட்டி ஒன்று நள்ளிரவு வேளையில் நிறைவுக்கு வந்தது.

நள்ளிரவு 12.30 அளவில் ஆரம்பமான இந்த போட்டி,  PSG அணிக்காக மெஸ்ஸி அறிமுகமாகும் முதல் கால்பந்து போட்டி என்பதால் ரசிகர்களால் அதிகம் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்டது.

பிரான்சில் இடம்பெற்றுவரும் லீக் -1 கால்பந்தாட்ட தொடரின் மற்றுமொரு போட்டியில் நேற்று  PSG அணிக்கு மெஸ்ஸி அறிமுகமானார்.

இந்த போட்டியில் கைலியன் மாப்பே 15, 63 வது நிமிடங்களில்  இரண்டு கோல்களை பெற்றுக்கொள்ள 2-0 என பாரிஸ் செயின்ட் ஜெர்மனி அணி அபார வெற்றியைப் பெற்றுக் கொண்டது.

இந்த போட்டியில் 65 நிமிடங்களாக மெஸ்ஸி களமிறங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது, மெஸ்ஸி 65 நிமிடங்களாக களமிறக்கப்படாத நிலையில் 65 வது நிமிடத்தில் விளையாடிக்கொண்டிருந்த நெய்மருக்கு பதிலாக மாற்று வீர்ராக மெஸ்சி களமிறக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.

இறுதியில் மிக அபாரமான முறையில் பிஎஸ்ஜி கழகம் இந்தப் போட்டியை 2-0 வெற்றி கொண்டது.

பார்சிலோனா கழகத்திற்காக மெஸ்ஸியும் ,நெய்மரும் இணைந்து கலக்கியை போன்று இருவரும் இணைந்து PSG க்கு விளையாடுவார்கள் என எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு நேற்று ஏமாற்றமாகவே அமைந்தது.

2004ஆம் ஆண்டு 30 இலக்க சீருடையில் பார்சிலோனா அணிக்காக கால்பந்து கழக மட்டப் போட்டிகளில் அறிமுகமாகிய மெஸ்ஸி, 17 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்னுமொரு கழகமான PSG கழகத்துக்கு அதேபோன்று 30 ஆம் இலக்க சீருடையில் நேற்று அறிமுகம் ஆகியிருக்கிறார்.