நேபாளத்தில் கிரிக்கட் விளையாடப்போகும் இலங்கையின் 7 வீரர்கள்..!

நேபாளத்தில் நடைபெறவுள்ள எவரெஸ்ட் பிரீமியர் லீக்(EPL) 2021 இல் ஏழு இலங்கை கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கின்றனர்.

எவரெஸ்ட் பிரீமியர் லீக் செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 9 வரை நடைபெறவுள்ளது.

போட்டியில் விளையாடும் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் பின்வருமாறு:

உபுல் தரங்க

தம்மிக பிரசாத்

சீக்குகே பிரசன்னா

அசேல குணரத்ன

ஓஷாத பெர்னாண்டோ

சந்துன் வீரக்கொடி

செஹான் ஆராச்சிகே

இதற்கிடையில், இருபது -20 உலகக் கோப்பைக்கான தேசியப் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டதால், இந்தப் போட்டியில் விளையாட திட்டமிடப்பட்டிருந்த தினேஷ் சந்திமால் பங்கேற்க மாட்டார் எனவும் அறியப்படுகிறது.

எவரெஸ்ட் பிரீமியர் லீக் 2021 இல் பங்கேற்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர்கள் நேபாளம் சென்றுள்ளனர்.